Tom Kha Phak
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய்-6-8 லெமன் கிராஸ் இஞ்சி பீன்ஸ்-1/4 கிலோ காரட்-நீளமாக நறுக்கியது-1/4 கிலோ காளான்-100 கிராம் எலுமிச்சம் பழம்-1 அஜினமோட்டோ-சிறிதளவு தேங்காய்ப்பால்-2 கப் உப்பு-தேவையான அளவு
காய்கறிகளை நறுக்கி, ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நிறைய நீருடன் போட்டுக் கொதிக்க விடவும். சிறிது நேரம் கொதித்த பின், பச்சை மிளகாய் காளான் முதலியவையும் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் நீரை வடித்து, எலுமிச்சை சாறும் தேங்காய்ப் பாலும் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் சுடச்சுடப் பரிமாறவும்.
முக்கியக் குறிப்பு
தாய்லாந்து தேசத்து ரெசிபிகளைத் தயாரிக்க அதற்கென்று தனி இஞ்சி உபயோகிக்க வேண்டும். அதற்கு காஇஞ்சி என்று பெயர். பெரிய கடைகளில் கிடைக்கும்.
லெமன் கிராஸ் என்று வெங்காயத் தழை போன்ற ஒன்று தாய்லாந்து சமையலில் உபயோகப்படுத்துவார்கள். அசைவப் பிரியர்கள், காய்கறிகள் வெந்த தண்ணீருடன் சிக்கன் வெந்த ஸ்டாக்கையும் உபயோகப்படுத்தலாம்.
|