குக்கீஸ்
தேவையான பொருட்கள்
வெண்ணெய் - ¾ கோப்பை
பொடி செய்த சக்கரை - 1 1/2 கோப்பை
முட்டை - 1
முட்டைக் கரு - 1
இன்ஸ்டண்ட் காபி பவுடர் - 2 1/2 டீஸ்பூன்
துருவிய சாக்லேட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
மைதா - 2 1/2 கோப்பை 1/2 கோப்பை
ஓவனை 180 o / 350 o கு உஷ்ணத்தில் முன்பே சூடாக்கவும்.
எலக்ட்ரிக் பீட்டர் அல்லது மிக்ஸியில் வெண்ணெயுடன் சக்கரை, முட்டை, முட்டைக்கரு, காபி பவுடர், சாக்லேட், மைதா என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து அடிக்கவும். பிறகு கலவை கெட்டியாகும் வரை கலக்கவும். வெளியில் எடுத்து உருண்டையாகப் பிசையவும். க்ரீஸ் ப்ரூஃப் பேப்பரில் சுற்றி, 45 நிமிடம் குளிர வைக்கவும்.
பின் மாவு தூவி இந்த கலவையை 4 மி.மீ கனத்துக்கு பரப்பவும். உங்களுக்குப் பிடித்தது போல சதுர அல்லது முக்கோண வடிவத்தில் பிஸ்கேட் கட்டர் அல்லது கத்தி கொண்டு செய்து 8 நிமிடம் அல்லது லேசான நிறம் வரும் வரை பேக் செய்யவும். குளிர வைத்து, கிரீம் கலந்த காபி / சாக்லேட், முந்திரி பருப்பு கொண்டு அலங்கரிக்கலாம். அப்படியே பரிமாறினாலும் அற்புதச் சுவையுடன் இருக்கும்.
|