தேவையான பொருட்கள் : -
ஆப்பிள் 4 முட்டை 1 மைதா 3 மேஜைக் கரண்டி தண்ணீர் 1/4 லிட்டர் சர்க்கரை 6 மேஜைக் கரண்டி எள் 1 மேஜைக் கரண்டி எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை : -
1. தோலையும், விதைகளையும் நீக்கிவிட்டு, ஆப்பிள்களை பெரிய சதுரங்களாக வெட்டவும். 2. ஒரு பாத்திரத்தில் முட்டையையும், மைதாவையும் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையில் ஆப்பிள் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொன்னிரமாகும் வரை வறுக்கவும். 3. 1 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, அதில் சர்க்கரையை சேர்க்கவும். 5 நிமிடம்சமைக்கவும். அதில் வறுத்த ஆப்பிள் துண்டுகளையும், எள்ளையும் சேர்க்கவும். 4. பிறகு தண்ணீரில் போட்டு குளிர வைக்கவும். 5. குளிர்ந்தவுடன் தண்ணீரை வடிகட்டி பரிமாறவும்.
|