முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சைனீஸ்
 
ஷேஸ்வான் ரைஸ்
Webdunia
Schezwan Rice

மிகவும் பிரபலமான இந்த சைனீஸ் ரைஸ் ஐட்டம், டின்னர் பார்ட்டிகளுக்கு மிகவும் உகந்தது.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப் அல்லது பொன்னி அரிசி 2 கப்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்-6 மிக மெல்லியதாக நீளமாக நறுக்கியது
வெங்காயம்-1 கப் மிக மெல்லியதாக நீளமாக நறுக்கியது

காரட்-1 கப் மிக மெல்லியதாக நீளமாக நறுக்கியது
பீன்ஸ்-1 கப் மிக மெல்லியதாக நீளமாக நறுக்கியது
குடை மிளகாய்-1 கப் மிக மெல்லியதாக நீளமாக நறுக்கியது
கோஸ்-1 கப் மிக மெல்லியதாக நீளமாக நறுக்கியது
லீக்ஸ் இலை-1 பிடி மிக மெல்லியதாக நீளமாக நறுக்கியது
செலரி இலை-1 பிடி மிக மெல்லியதாக நீளமாக நறுக்கியது

சோயா சாஸ்-1 மேஜைக் கரண்டி
வினிகர்-1 மேஜைக் கரண்டி

விழுதாக அரைக்க

இஞ்சிப் பெரிய துண்டு
பூண்டு-10
காய்ந்த மிளகாய்-6-8

செய்முறை

ஒரு கனமான வாணலியில் வெண்ணை உருக்கிக் கொள்ளவும். அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் ஊற வைத்த அரிசியையும் 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டை உருக்கிய வெண்ணெயில் போட்டு, சிறிது வறுக்கவும். வாசனை வந்த பின், இரு மடங்கு தண்ணீரும் தேவையான உப்பு (சுமார் 1 டீஸ்பூன்) போட்டு ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.

மற்றொரு வாணலியில், எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும். பின் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

இதற்குப் பின் நறுக்கிய காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். நாம் தயாராக வைத்துள்ள இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் பேஸ்ட், சோயா சாஸ், வினிகர், உப்பு முதலியவை கலந்து காய்கறிகளுடன் சேர்த்து மூடி வைக்கவும். அடிக்கடி கிளற வேண்டாம். வெந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும்.

தயாராக வைத்துள்ள சாதத்தை, ஒரு தட்டில் பரத்தி அதன் மேல் காய்கறி கலவை பரத்தவும். பின் கடைசியில் சேர்த்துக் கலக்கவும். இவ்வாறு செய்தால், சாதமும் காய்கறியும் சேர்ந்து கலந்து விடும்.(ஹோட்டலில் சிவப்புக் கலர் சேர்ப்பதால் செக்கச் செவேலென்று இருக்கும். விருப்பப்பட்டால் சேர்க்கலாம்)

இதை சைனீஸ் ஸ்வீட் & சார் (ளுறநநவ & ளுடிரச) க்ரேவியுடனோ, தக்காளி சாஸ், சில்லி சாஸுடனோ, மஞ்சூரியன் க்ரேவியுடனோ சாப்பிடலாம் (இவற்றைப் பின்வரும் இதழ்களில் பார்க்கலாம்).