முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சைனீஸ்
 
சைனீஸ் வாண்டன் சூப்
Webdunia
Chinese Wanton Soup

எப்படிச் செய்வது? கேரட், பீன்ஸ், கோஸ் வேக வைத்த தண்ணீர் 10 கப் எடுத்துக் கொள்ளவும்.

வாண்டன் செய்ய:

2 கப் மைதாவில் உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து மெல்லிய வட்டங்களாக இட, வாண்டன் ரெடி.

பூரணம் செய்ய:

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய நான்கு பச்சை மிளகாயை வதக்கவும். அத்துடன் துருவிய கேரட், கோஸ், நூல்கோல் ஆகியவற்றை தலா கால் கப் சேர்த்து உப்பு, சோயா சாஸுடன் முக்கால்வாசி வேக வைத்தால் பூரணம் ரெடி!

வாண்டன் வட்டங்களை இரண்டாக வெட்டி, ஒவ்வொரு துண்டுக்குள்ளும் பூரணத்தை வைத்து, அதை மூடி, இட்லிப் பானையில் வேக வைக்கவும்.

பரிமாறும் முறை:

வெந்த வாண்டன்களை, தனித்தனி கப்புகளில் போடவும். வெஜிடபிள் ஸ்டாக்குடன் உப்பு வெள்ளை மிளகுத்தூள், சில்லி சாஸ், சாயா சாஸ் சேர்த்து கொதிக்க வைத்து, பரிமாறவும்.