முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சைனீஸ்
 
அமெரிக்கன் சாப்சூயி
Webdunia
American Chopsuey

மிகவும் சுவையான ஈசியானது செய்முறை நீண்டதாக இருப்பினும் வீட்டில் செய்தால் மிகவும் குறைந்த விலையில் செய்யலாம். இது சைனீஸ் பேல் பூரி. இதைத் தயார் செய்ய நிறைய விஷயங்கள் ரெடி செய்ய வேண்டும்.

முதலில் நூடுல்ஸ் ரெடி செய்யவும். இதற்கு சௌமீன் என்று பெயர்

முதல் பகுதி
சௌமீன் - Chowmin

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ் - 2 பாக்கெட்
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1 பெரிய சைஸ்
வெங்காயத்தாள் - 1/2 கட்டு
முட்டை கோஸ் - 100 கிராம்
காரட் - 2
பீன்ஸ் - 100 கிராம்
வதக்க எண்ணெய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 6-8
இஞ்சி பேஸ்ட் - 1டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
சோயா சாஸ் - 1/4 கப்
பெரிய காய்கறிக் கடைகளில் நிச்சயமாக கிடைக்கும்
லீக்ஸ் - 1 பிடி (மிகவும் பொடியாக நறுக்கியது)
செலரி - 1 பிடி (மிகவும் பொடியாக நறுக்கியது)

1. முதலில் நூடுல்ஸ் ரெடி செய்து கொள்ளவும்.

பெரிய வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விட்டு அதில் நூடுல்ஸ் போடவும். நன்றாக வெந்தவுடன், சூடான தண்ணீரை வடித்துப் பின் குளிர்ந்த நீரில் அலசி ஒரு தட்டில் பரத்தி, சிறிது எண்ணெய் தடவி வைக்கவும். எல்லாக் காய்களையும் (பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய், காரட், பீன்ஸ், கோஸ் முதலியவைகளை) மெல்லியதாக நீளமாக நறுக்கவும்.

அடுப்பில் எண்ணெய் காய வைத்து முதலில் மிக மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். ப்ரௌன் ஆகத் தேவையில்லை. பின் நறுக்கிய காய்கறிகள், உப்பு, சோயா சாஸ் கலந்து மூடி கலக்கவும். மிதமான தீயில் வைக்கவும். தண்ணீர் தெளிக்க வேண்டாம். காய்கறிகள், சோயா சாஸ் சேர்ப்பதில் மிக எளிதில் வெந்து விடும். நாம் தயாராக வைத்துள்ள நூடுல்ஸை இத்துடன் சேர்த்து அடுத்ததாக நாம் ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டியது ஊசளையீல நூடுல்ஸ்.

1| 2| 3