பங்கு சந்தை தொடர்ந்து வீழ்ச்சி


Murugan| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (16:33 IST)
கடந்த சில நாட்களாகவே பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 

 

 
இன்று மதியம் 12 மணியளவில் மும்பை பங்குச் சந்தை  கடும் சரிவுடன் காணப்பட்டது. 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 882 புள்ளிகள் சரிந்து  23,998 என்ற அளவுக்கு வர்த்தகமானது.
 
பல முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகளில் திருப்தியடைந்த  முதலீட்டாளர்கள் அத்துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் அதிக ஆர்வத்துடன் முதலீடு செய்தனர். அதையடுத்து, பொறியியல் தொடர்பான பங்குகள் சற்று ஏற்றம் கண்டன.
 
முடிவில், மும்பை பங்கு சந்தை 417.80 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 24062.04-ல் முடிந்தது. தேசிய பங்கு சந்தை 125.80 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 7309.30-ல் முடிந்தது.


இதில் மேலும் படிக்கவும் :