மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்!

webdunia photoWD
பொதுவாக எல்லோரிடமும் எல்லா விஷங்களுமே பிடித்த மாதிரி இருக்காது. ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தீவு என்பதால் ஒவ்வொருவரின் ஆசை, ஆர்வம், நடவடிக்கை என எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

நீங்கள் எப்படி எல்லாம் இருக்கிறீர்களோ அப்பயே நீங்கள் விரும்புபவரும் அவரை மாற்றிக் கொண்டால் நல்லது என நினைக்காதீர்கள்.

ஒரே கருத்துள்ளவர்களுக்குள் எளிதில் நட்பு ஏற்பட்டுவிடலாம். ஆனால் அதே சீக்கிரத்தில் அவர்களுக்குள் சலிப்பும் தட்டிவிடும் என்பதும் ஒரு உண்மைதான்.

பொதுவாக எந்த விஷயத்திற்காக காதலித்தீர்களோ, அதே விஷயம் பிற்காலத்தில் பிரச்சினையாவதில் இருந்து தப்பிக்கலாம்.

webdunia photoWD
உதாரணத்திற்கு அவர் உடைகளை மிகச்சரியாக நிற ஒற்றுமையுடன் அணிபவர் என்பதற்காகவே காதலித்திருப்பீர்கள். ஆனால் எங்காவது அவசரமாகச் செல்லும்போது அவர் நிற ஒற்றுமையான ஆடையைத் தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு கோபம் வரும்.

சண்டை போடுவீர்கள். போக வேண்டிய இடத்திற்குப் போகக் கூட முடியாமல் போய்விடும்.

நீங்கள் அப்போது என்ன நினைப்பீர்கள், அவர் இந்த ஆடை விஷயத்தில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றுதான் நினைப்பீர்கள். அது உண்மையல்ல, இது போனால் வேறொரு விஷயத்தில் அவர் மாற வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

எனவே இது ஒரு தொடர்கதையாக நீண்டு கொண்டுதான் இருக்கும்.

ஆனால் நீங்கள் விரும்பும் நபர் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள்.

நீங்கள் அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வது அல்லது அவரது அந்த குணத்தை ஏற்றுக் கொள்வது நல்லது.
Webdunia|
நீங்கள் காதலிப்பவரா? காதலித்து திருமணம் புரிந்து கொண்டவரா? காதலித்துக் கொண்டிருப்பவரா? காதல் திருமணம் செய்து கொள்ள இருப்பவரா? இதில் எதுவாக இருந்தாலும் சரி உங்களுக்கு ஒரே ஒரு ஆலோசனை தான். அதாவது அவரை மாற்ற முயற்சிக்காமல் நீங்கள் மாற முயற்சி செய்யுங்கள்.
(இது கெட்ட பழக்க வழக்கங்களுக்குப் பொருந்தாது. சாதாரண நடைமுறைப் பழக்க வழக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்.)இது என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்.. எல்லாவற்றையும் நாங்களே மாற்றிக் கொண்டால் அது எப்படி என்று கேள்வி கேட்பது புரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :