மரண‌த்தை தழுவு‌ம் ‌நிலை‌யி‌ல் ‌திருமண‌ம்

Webdunia| Last Modified திங்கள், 23 பிப்ரவரி 2009 (13:07 IST)
பு‌ற்றுநோ‌ய் பா‌தி‌த்து இ‌ன்னு‌ம் ‌ஒரு ‌சில வார‌ங்க‌ளி‌ல் மரண‌த்தை தழுவ‌விரு‌க்கு‌ம் நடிகை ஜே‌ட் கூடி ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

இங்கிலாந்தில் பிரபலமாக விளங்கும் `பிக் பிரதர்' என்ற தொலை‌க்கா‌ட்‌சி ‌நிகழ்ச்சியின்போது இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதாக கு‌ற்ற‌‌ம்சா‌ட்‌ட‌ப்ப‌ட்டு இ‌ந்‌தியா‌வி‌ல் ‌பிரபலமடை‌ந்தவ‌ர் நடிகை ஜேட் கூடி.

அது குறித்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் ஜேட் கூடிக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு `கீமோ தெரபி' சிகிச்சை அளித்ததால் தலை மொட்டை அடிக்கப்பட்டது.
பு‌ற்றுநோ‌ய் மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வரு‌ம் ஜேட் கூடியின் உயிருக்கு மரு‌த்துவ‌ர்க‌ள் இன்னும் சில வாரங்களே கெடு விதித்துள்ளன‌ர்.

இ‌ந்த நிலையில் ஜே‌ட் கூடி, ஜேக் ட்வீட் என்ற வாலிபரை திருமணம் செய்ய முடிவு செய்தார். அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற ஜேக் முன் வந்தார்.
அதன்படி, நே‌ற்று எஸ்ஸெக்ஸ் என்ற இடத்தில் உள்ள டவுன் ஹால் என்ற ‌வி‌டு‌தி‌யி‌ல் ஜே‌‌ட் கூடி - ஜே‌க் ‌ட்‌வீ‌ட் ‌திருமண‌ம் நடைபெ‌ற்றது.

இன்னும் சில வாரங்களில் இறக்கப்போகும் ஜேட் கூடியின் திருமணம் மகிழ்ச்சியும் சோகமும் இழையோட நடந்து முடிந்தது. மணமகன் ஜேக், ஒரு அடிதடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் தான் அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ப‌ல்வேறு ‌நிப‌ந்தனைகளு‌க்கு இ‌டையே ஜே‌க் த‌ற்போது ‌பிணைய‌த்‌தி‌ல் வெ‌ளியே உ‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :