வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2019 (16:01 IST)

தேனியின் தோனியா ஓபிஎஸ் மகன்? சமூக வலைத்தளங்களில் பரவி வரும் மீம்ஸ்கள்

தமிழகத்தின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக தேனி தொகுதி மாறியுள்ளது. துணண முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரகுமார் போட்டியிடுவதால் முதலில் முக்கியமான தொகுதியாக இருந்த தேனி, அமமுகவில் தங்கதமிழ்செல்வனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது
 
திமுக-காங்கிரஸ் என்ற வலுவான கூட்டணியின் வேட்பாளராக  ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தாலும் இந்த தொகுதிக்கு இவர் அறிமுகமில்லாதவர் என்பதால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொகுதியில் உண்மையான போட்டி அதிமுக, அமமுக வேட்பாளர்களுக்கு இடையில்தான் உள்ளது
 
ஓபிஎஸ் மகன் பக்கம் பணம் மற்றும் ஆட்சி அதிகாரம் இருப்பதும், தேனி தொகுதியின் முன்னாள் எம்பி தினகரன் தொகுதிக்கு செய்த சில நல்ல விஷயங்கள் மற்றும் பணம், அறிமுகமான வேட்பாளர் என்ற வகையில் தங்கதமிழ்செல்வனுக்கு சாதகமாக உள்ளது
 
இந்த நிலையில்  சென்னை மற்றும் பெங்களூரு அணி கேப்டன்கள் தோனி மற்றும் ஹோலியுடன் ரவீந்திரகுமார் மற்றும் தங்கதமிழ்செலவனை ஒப்பிட்டு, நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். தேனியின் தோனியாக ரவீந்திரநாத் குமாரையும், அமமுக வேட்பாளரான தங்கதமிழ்செல்வனை கோஹ்லியாகவும் சித்தரிக்கும் மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.