தினகரன் கட்சிக்குத் தாவும் அதிமுகவினர் : வேலை செய்யுதா ’பரிசுப்பெட்டி’ ?

dinrakaran
Last Modified ஞாயிறு, 31 மார்ச் 2019 (10:47 IST)
வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அரக்க பரக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திராவிட கட்களுடன் பல முக்கிய கட்சிகள் ஐக்கியமாகி விட்டன.நேற்றுக்கு முன் தின தினகரனின் அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.  இதையடுத்து அமமுகவினர் குஷியாகினர். பின்னர் குறுகிய நேரத்தின் தம் சின்னத்தை பிரபலப்படுத்த விளம்பர யுக்திகளை கையாண்டு டுவிட்டரிலும் ட்ரண்டாக்கினர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினர், தினகரனின் கட்சிக்கு மாறி வருவதாக இரு ஆடியோ பதிவு சமீபத்தில்  வெளியானது.
 
இதனையடுத்து அதிமுகவினர் பலர் அமமுக  கட்சிக்கு மாறிவருவதாகவும் தகவல் வெளியாகிறது. திமுகவுடன் தான் போட்டியிடும் என்று பலர் நினைத்திருக்க இன்று தினகரனின் அமமுகதான் அதிமுகவின் முக்கிய போட்டியாக இருக்கும்  என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :