திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (11:08 IST)

பெட்ரோல் ரூ.75 - டீசல் ரூ.65..! திமுக தேர்தல் அறிக்கை சாத்தியமா..?

Petrol
பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய்,  டீசல் விலை லிட்டருக்கு 65 ரூபாய் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
 
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்பி தலைமையில் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.


Stalin
அதில் உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கப்படும், மாநில சுயாட்சி பெற அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்,  தமிழகத்தில் நீட் விலக்கு, திருக்குறள் தேசிய நூலக அறிவிக்கப்படும்,  நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடிகள் அகற்றப்படும், வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும்,  சிலிண்டர் விலை 500, பெட்ரோல் விலை 75, டீசல் விலை 65 விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும், கல்வி கடன் நிலை தள்ளுபடி செய்யப்படும், மாநிலங்களுக்கு சுயாட்சி பெற அரசி நோன்பு சட்டம் திருத்தப்படும், ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கிடு உடனடியாக அமல்படுத்தப்படும், நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலை உணவு கொண்டுவரப்படும், இந்தியா முழுவதும் மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.