ஓட்டு போட்டு, போட்டோ போட்டா ரூ.7,000 பரிசு!! தேர்தல் ஆணையத்தின் ஆஃபர்!

Last Updated: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:58 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஓட்டு போட்டு, செல்பி எடுத்து அதை குறிப்பிட்ட வாட்ஸ் ஆப் நம்பருக்கு அனுப்பினால் ரூ.7,000 பரிசு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
மிசோசம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. இங்கு நாளை மறுதினம் வாக்குபதிவு நடைபெற்வுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 7,84,405 வாக்காளர்கள் உள்ளனர். 4,20,408 பெண் வாக்காளர்களும், 81,991 ஆண் வாக்காளர்களும், முதல் முறை வாக்காளர்கள் 52,556 பேர் உள்ளனர். 
 
எனவே, முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் புது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. முதல் முறை வாக்காளர்கள், ஓட்டு போட்டதும் ஓட்டு போட்டதற்கான அடையாள மையுடன் செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு வழங்கப்படுமாம். 
 
அதாவது, அழகாக செல்பி எடுத்து அனுபுவோரில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ.7,000, இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :