ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (11:06 IST)

திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டணி, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் அறிவிப்பு என அனைத்து பணிகளையும் முடித்துவிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வரும் 20ஆம் தேதி முதல் திருவாரூரில் இருந்து தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்
 
* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் 
 
* பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்
 
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வலியுறுத்தப்படும்
 
* கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்
 
* மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் 
 
* வேளாந்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை
 
* சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்
 
* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்  
 
* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம்
 
* இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை
 
* 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை
 
* பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் பழைய முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்
 
* பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்
 
* "சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பாலியல் ரீதியான சம்பவங்களை தவிர்க்க புதிய சட்டம்
 
* நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரி கட்டணம் ரத்து!
 
* நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
 
* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை!
 
* கேபிள் டிவிக்கு பழைய முறை கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 
* மாணவர்கள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்
 
* தனி நபர் வருமானத்தை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்