ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 ஜனவரி 2019 (17:23 IST)

ரூ.4,444 விலையில் 'ஃபேஸ் அன்லாக் ’ வசதி கொண்ட ஸ்மார்ட் போன் அறிமுகம்

இந்தியாவில் கால் பதித்துள்ள  சோலொ நிறுவனமானது   ஃபேஸ் அன்லாக் வசதியுடன் கூடிய தனது ஸ்மார்ட்போனினை  அசத்தலாக அறிமுகம் செய்துள்ளது.
இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள நம் இந்தியாவில்  நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
 
சோலா இரா 4 எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச்  ஹெச்.டி.பிள்ஸ் ஸ்கிரீன் , 2.5 D வளைந்த கிளாஸ் தொடுதிரை, ஆண்டிராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கிறது.
 
போட்டோக்கள் எடுக்க  8 எம்பி பிரைமரி கேமரா , 5 எம்பி செல்பி கேமரா இரு கேமராசென்சார்களுக்கும், எல்.இ..டி .பிளாஷ் லைட், 000 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் இயங்குகிறது.
 
அனைத்து செல்போன்களிலும் கைரேகை சென்சார் வரும் நிலையில் இதில் சென்சார் வசதி இல்லை ஸாமார்ட்போனில் பாதுகாப்புக்கு ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளது . பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும்.
 
இந்தியாவில் இப்புதிய ஸ்மார்ட் போன்  அமேசான் வலைதளத்தில் மட்டுமே பிரத்யேகமாய் கிடைக்கும் எனவும், சோலோ இரா எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4444 இருக்கும் எனவும் வரும் 9 ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.