திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (12:56 IST)

iPhone 14 வாங்க ஆசையா? செம சான்ஸ் இது! – அதிரடி காதலர் தின விற்பனை!

iphone 14
காதலர் தினத்தை முன்னிட்டி ஆப்பிள் ஐபோன் 14 மாடல்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது இமேஜின் ஸ்டோர்.

கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 14, 14 ப்ளஸ், 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தது. உலகம் முழுவதும் பலரிடையே ஐபோன் பயன்பாடு விரும்பத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது.

இந்தியாவில் ஐபோன் ப்ராண்டுகளை விற்கும் ரீட்டெய்லரான Imagine store காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 14 மாடல்களில் அதிரடி விலை சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.79,900 மதிப்புள்ள ஐபோன் 14 மாடலுக்கு இமேஜின் இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் ரூ.6,000 வழங்கப்படுகிறது. HDFC பேங்க் கார்டுகள் மற்றும் Easy EMI வசதிகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.4,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மொத்தமாக ரூ.10 ஆயிரம் போக ரூ.69,900க்கு இந்த மொபைலை இமேஜின் ஸ்டோர் மூலமாக வாங்கலாம்.

iPhone 14

அதுபோல ரூ.89,900 மதிப்புள்ள ஐபோன் 14 ப்ளஸ் இமேஜின் டிஸ்கவுண்ட் ரூ.7,000 மற்றும் HDFC கேஷ்பேக்குடன் ரூ.78,900க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் ரூ.1,29,900 மதிப்புடைய ஐபோன் 14 ப்ரோ இமேஜின் டிஸ்கவுண்ட் ரூ.1500 மற்றும் HDFC கேஷ்பேக் ரூ.3000 மூலம் ரூ.1,25,400க்கு கிடைக்கிறது. ரூ.1,39,900 மதிப்புடைய ஐபோன் ப்ரோ மேக்ஸ் ப்ரோ இமேஜின் டிஸ்கவுண்ட் ரூ.1500 மற்றும் HDFC கேஷ்பேக் ரூ.3000 மூலம் ரூ.1,35,400க்கும் விற்பனையாகிறது.

iPhone 14


இமேஜின் ஸ்டோரில் காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகை பிப்ரவரி 28ம் தேதி வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ வாட்ச் உள்ளிட்ட இதர ஆப்பிள் தயாரிப்புகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Edit By Prasanth.K