வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (11:15 IST)

அம்பானிக்கா இந்த நிலை? ரிலையன்ஸ் சொத்துகளை வாங்கும் ஏர்டெல்!

அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் சொத்துக்களை வாங்க பாரதி ஏர்டெல் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாய் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருகாலத்தில் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். ஆரம்ப கட்டத்தில் தொலைதொடர்பு சேவையில் உச்சக்கட்டத்தில் இருந்த ரிலையன்ஸ் நாளடைவில் தொழில் போட்டிகளால் சரிவை சந்திக்க தொடங்கியது.

இதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தை சந்தித்தது. மேலும் கடன் தொகையும் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார் அனில் அம்பானி.

தற்போது கைவிடப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களான செல்போன் டவர்கள், தொலைத்தொடர்பு கருவிகள், ஸ்பெக்ட்ரம் உரிமைகள் ஆகியவற்றை வாங்கி கொள்ள பாரதி ஏர்டெல் விண்ணப்பித்துள்ளது.

இன்றைய தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னனியில் விளங்கும் ஜியோ நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் சொத்துக்களைதான் ஏர்டெல் வாங்க முயல்கிறது. மேலும் ஜியோவுக்கும், ஏர்டெல்லுக்கும் இடையே தொலைதொடர்பு சேவையில் தொடர் போட்டிகள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.