சிஏஏ விவாதம்: அமித்ஷா சவாலை ஏற்று கொண்ட முன்னாள் முதல்வர்கள்!

Last Modified வியாழன், 23 ஜனவரி 2020 (08:26 IST)
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த குடியுரிமை திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்றும் தைரியமிருந்தால் தன்னுடன் பொது மேடையில் இந்த சட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? என்றும் அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குடியிருப்பு சட்டம் குறித்த விவாதத்துக்கு நாங்கள் தயார் என உத்தர் பிரதேச மாநில முன்னாள் முதல்வர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்த விவாதத்திற்கு நாங்கள் தயார் என்றும் இந்த விவாதம் எங்கு நடத்தலாம் என்பதை அமித்ஷா அவர்களே இடத்தை தேர்வு செய்யலாம் என்றும் ஆனால் இந்த விவாதம் அனைத்து சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அமித்ஷா விரும்பும் தொகுப்பாளர்கள் இந்த விவாதத்தை நடத்தலாம் என்றும் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர்களின் இந்த கோரிக்கையை ஏற்று அமித்ஷா விவாதத்திற்கு சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்இதில் மேலும் படிக்கவும் :