மந்த்ராலயாவில் வழிபாடு செய்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி

Rajini
Cauveri Manickam (Sasi)| Last Updated: செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:47 IST)
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி, மந்த்ராலயாவில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.

 
அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை ரஜினி மேற்கொண்டு வருகிறார் என்று தகவல்கள் வெளியானது. வரும் டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் அரசியல் கட்சி குறித்து அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் உள்ளது மந்த்ராயலா கோவில். இங்குள்ள ராகவேந்திரா கோவிலில், இன்று காலை வழிபாடு செய்துள்ளார் ரஜினி. வெள்ளை வேட்டி, சட்டையில் கோவிலுக்குச் சென்ற ரஜினி, சட்டை இல்லாமல்  வெறும் வேட்டியுடன் ராகவேந்திரரை வேண்டியுள்ளார். அவரது மந்த்ராலயம் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :