2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கிய சவுதி இளவரசர்

house
Last Updated: திங்கள், 18 டிசம்பர் 2017 (15:47 IST)
உலகிலேயே அதிக விலை கொண்ட வீடு 2015-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த வீட்டை வாங்கியது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் ‘சாட்டியூ லூயிஸ் 14’ என்ற அரண்மனையை சவுதி இளவரசர் வாங்கியுள்ளார்.  57 ஏக்கர் கொண்ட இந்த அரண்மனையில் சினிமா தியேட்டர், பல்வேறு நீச்சல் குளங்கள், அகழி என அனைத்து வசதிகளும் இருக்கிறது. வீடு மட்டும் 75 ஆயிரத்து 350 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
costly
2015-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடிக்கு விலைபோன இந்த வீடு தான் உலகிலேயே அதிக விலை கொண்ட வீடாகும். ஆனால் இந்த வீட்டை வாங்கியவர் யார்ரென்ற ரகசியம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த வீட்டை வாங்கியவர் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் பிரபல ஓவியர் லியானர்டோ டாவின்சி வரைந்த ஓவியம் ஒன்றை ரூ.2 ஆயிரத்து 800 கோடிக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :