மாணவி க‌‌ற்பழிப்பை அரசியலாக்க வேண்டாம்- ஷீலா தீக்சித்

Webdunia|
FILE
டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில், இதனை அரசியலாக்க வேண்டாம் என்று அம்மாநில முதல் அமைச்சர் ஷீலா தீக்சித் கூறியுள்ளார்.

கற்பழிக்கப்பட்ட மாணவிக்காக நாடெங்கும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், இதனை அரசியலாக்க வேண்டாம் என்று டெல்லி முதல் அமைச்சர் ஷீலா தீக்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள அவர். இந்த வழக்கை சிறப்பு விரைவி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாணவி உயிருக்கு போராடும் கட்டத்திலிருந்து தாண்டாத நிலையில், நேற்று முதல் அமைச்சர் ஷீலா தீக்சித் வீட்டை மாணவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். வேதனைக்குரிய சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவியிலிருந்து தீக்சித் விலகும் படி அவர்கள் கோஷமிட்டனர்.
கூட்டத்தை கலைக்க டெல்லி போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.
இதில் மேலும் படிக்கவும் :