வெற்றி: பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

Webdunia|
FILE
சென்னை, கொல்கட்டா ஆகிய இரண்டு போட்டிகளிலும் வென்று இந்தியாவை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த பாகிஸ்தான் அணியின் வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்கள் அவர்கள் நாட்டில் உற்சாகமாக கொண்டாடினர்.

இஸ்லாமாபாத், ஐதராபாத், கராச்சி போன்ற நகரங்களில் மக்கள் பாகிஸ்தான் கொடியுடன் ஆரவாரம் செய்தனர். இங்கு புத்தாண்டு கொண்டாட்ட தினம் போல் அங்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டதாக பாகிஸ்தான் உள்நாட்டுப் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், வானில் வண்ண வண்ணமாக ஒளிரும் ராக்கெட்டுகளை விட்டும் கொண்டாடியுள்ளனர்.
கராச்சி மற்றும் லாகூரில் இளம் பெண்களும், ஆண்களும் வெற்றி உற்சாகத்தில் சாலைகளில் நடனமாடியதை பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :