பகவான் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு வலியுறுத்துவது என்ன...?

பகவத்கீதையை "பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். "பகவத் என்றால் "இறைவன். "கீதா என்றால் "நல்ல உபதேசம்.
இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ என்று மாறும். "தாகீ என்றால் "தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள்.
 
"துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் "கீதா விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது  அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென  பகவான் கிருஷ்ணர் சொன்னார்.
 
எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :