வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By

சிவன் ஆலயத்தில் வழிபாட்டின்போது பின்பற்ற வேண்டியவைகள்...!

சிவன் ஆலய வழிபாட்டை இவ்வாறுதான் செய்யவேண்டும் என்று சித்தர்கள் முறையாக வகுத்து வைத்திருந்தார்கள். இறைவன் உறையும் ஆலயங்களில் திருக்கோயில் வழிபாட்டு இயலின் படி, வழிபாடு நடத்தினால் நிச்சயமாக இறையருளை பெற்றிட முடியும்.
சிவாலயத்திற்கு செல்லும்போது தூய்மையான உடைஅணிந்து, வீபுதி பூசிக்கொண்டு, சிவ பாராயனங்களை மனதில் நினைத்துச் செல்ல வேண்டும். சிவ கோபுரத்தை தூல லிங்கம் என்பார்கள். எனவே இரண்டு கைகளையும் தலை மேல் குவித்து முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.
 
பலிபீடத்தின் முன்பாக வீழ்ந்து வணங்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய திருக்கோயில் என்றால் வடக்கு நோக்கியும், வடக்கு அல்லது தெற்கு  நோக்கிய கோயில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்க வேண்டும்.
 
ஆண்கள் தங்கள் எட்டு உறுப்புகள் நிலத்தில் படும்படி வீழ்ந்து வணங்க வேண்டும். எட்டு உறுப்புகள் என்பது தலை, 2 கைகள், 2 செவிகள், மேவாய், 2 புயங்கள். இரு செவிகளும் நிலத்தில் பட வேண்டும் என்றால் தலையை இரு பக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்க வேண்டும்.
 
பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் படும்படி வீழ்ந்து வணங்க வேண்டும். அந்த ஐந்து உறுப்புகள் தலை, 2 கைகள், 2 முழந்தாள். பிறகு இரு கரங்களையும்  மார்பின் மேல் குவித்து, சிவனை எண்ணிக்கொண்டே திருக்கோயில் சுற்றினை மூன்று முறை வலம் வர வேண்டும். ஐந்து, ஏழு, ஒன்பது என்ற  எண்ணிக்கையிலும் வலம் வரலாம்.