புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது ஏன்??

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது ஏன்??


Sasikala|
புரட்டாசி மாதத்தில் புதன் வீடாகிய கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார். புதன் பெருமாலை குறிக்கும் கிரகம் ஆகும். இம்மாதத்தில் வயிறு சம்பந்தமான அஜீரணம் பிரச்சினைகள் அதிகரிக்கும் காலம். உடல் வெப்பநிலையும் அதிகரிக்கும். பித்தம் போன்றவையும் அதிகரிக்கும்.

 
 
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
 
இந்த காரணங்களுக்காக இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை அஜீரணத்தை மிக அதிகப்படுத்தும். அஜீரணம் இருந்தால் கோபம் அதிகரிக்கும், காமம் அதிகைர்க்கும், சோம்பல், மறதி, சலிப்பு அதிகமாகும். பித்தம் அதிகரித்து வாதம், மயக்கம் உண்டாக்கும். இதனால்தான் நம் முன்னோர்கள் அதனை தவிர்ப்பதற்காக இந்த மாதத்தில் துளசி தீர்த்தம் சாப்பிட்டால் சரியாகும் என்றனர். துளசி பெருமாளுக்கு பிடித்த ஒன்றாகும். எனவேதான் இம்மாதத்தில் அசைவம் தவிர்க்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.
 
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்கள்.
 
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும். துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து அசைவம் ஒதுக்கி பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.


இதில் மேலும் படிக்கவும் :