முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் என்ன பலன்கள் தெரியுமா...?
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினம் என்பது முன்னோர்களை வழிபடும் தினமாகக் கடைப்பிடிக்கப்படு கிறது. அன்று நம் முன்னோர்களை நினைத்துக் குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் வார்த்து வழிபட்டால் நம் துன்பங்கள் தீர்ந்து இன்பங்கள் பிறக்கும் என்பது நம்பிக்கை.
நம்முடைய முன்னோர்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்களை வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அதேபோல் மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ஆனால் ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது.
தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.
முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்கும்போது எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். மேலும் தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.