வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தலைமுடியை கருமையாகவும் அடர்த்தியாகவும் வைத்து கொள்ள டிப்ஸ் !!

பெண்களுக்கு அழகு அவர்கள் கூந்தலே. ஆனால் அதிகமாக காற்று மாசு உண்டாவதால் அது நேராக நமது சருமம் மற்றும் முடிகளை பாதிக்கிறது.
 

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குளித்துப்  பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். நரை விழுவதையும் தடுக்கும். 
 
கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, அவுரி, நெல்லி, பொடுதலை ஆகியவற்றை இடித்து சாறு எடுத்து, சம அளவு இதில் கடுக்காய், தான்றிக்காய் பொடி சேர்த்து கலந்து, இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ச்சி வடிகட்டி தினமும் தலைக்குத் தேய்த்து வர முடி அடர்த்தியாக கருகருவென வளரும். 
 
கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு பதமான நிலையில் பொரித்து எடுத்து, எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலையில் மண்டை ஒட்டில் படும்படி மசாஜ் செய்து வந்தால் முடி நன்கு வளரும். முடி உதிர்தல் நின்று விடும். 
 
வாரம் ஒரு முறை வெந்தயத்தை முதல் நாள் இரவு நேரத்தில் மூன்று ஸ்பூன் அளவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து ஊறிய வெந்தய நீரை  வடிகட்டி நன்கு தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். ஊறிய வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவேண்டும். இதனால் முடி நன்கு வளரும். உடல் சூட்டையும் தணிக்கவும் உதவுகிறது. 
 
வாரத்திற்கு மூன்று முறையாவது நாம் தலை குளிக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அப்பொழுது தான் காற்று மாசுபடுதலில் இருந்து கூந்தலை காப்பாற்ற முடியும். அனைவரின் வீட்டிலும் சாதம் வடித்த நீர் கண்டிப்பாக இருக்கும். அதை வீணடிக்காமல் நமது தலையில் ஊறவைத்து குளித்தால் முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர தூண்டுகோலாக அமைகிறது. 
 
வெளிபுறம் நாம் கூந்தலை பாதுகாப்பதை விட தினமும் நாம் சாப்பிடும் வழக்கத்தில் கவனமாக இருப்பது அவசியம். அதிக ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை  சாப்பிட்டாலே முடி தானாக வளரும்.