1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கருமையாக உள்ள சருமத்தை வெள்ளையாக்க அழகு குறிப்புகள்....!!

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவவேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.
இரவில் படுக்கும்போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.
 
பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலரவைத்து கழுவவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமம் வெள்ளையாக மாறும்.
 
எலுமிச்சை சாற்றுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 4 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.
 
எலுமிச்சையை பாதியாக வெட்டி அதனை சாறு எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10  நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
 
எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவவேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.