ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (18:33 IST)

கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்: கரிசலாங்கண்ணியின் பலன்கள்..!

Karisalankanni
கரிசலாங்கண்ணி என்பது ஞான மூலிகை என நம் சித்தர்கள் கூறியிருக்கும் நிலையில் இந்த மூலிகை உடல் நலனுக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டு வகை கரிசலாங்கண்ணி உண்டு என்றும் கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம் என்றும் நம் சித்தர்கள் கூறியுள்ளனர்.

வெள்ளை கரிசலாங்கண்ணியை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான நோய், ரத்த சோகை  ஆகியவை குணமாகிவிடும் என்றும்  தினமும் இரண்டு முறை இளநீரில் கரிசலாங்கண்ணி சாறு கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

புற்றுநோய் கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை இந்த கரிசலாங்கண்ணிக்கு உண்டு

 மஞ்சள் கரிசலாங்கண்ணியை சாப்பிட்டு வந்தால் வலிப்பு, ரத்த புற்றுநோய் உள்ளிட்ட நோய் குணமாகும் என்றும் வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும் வல்லமை இதற்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran