வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

தாம்பத்திய சக்தியை அதிகரிக்கும் உணவுமுறைகள்

தாம்பத்திய சக்தியை அதிகரிக்கும் உணவுமுறைகள்

தாம்பத்தியத்தில் வெற்றிக்கு கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம்.


 


அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். 
 
எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால், செயல்பாடுகளில் ஆர்வம் கட்ட முடியாது.
 
உறவுக்கு முன், இனிமையான உரையாடலும், உணர்வு பரிமற்றலும், முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.
 
பேரிச்சம்பழம், பாதம் பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண்-பெண் உறவுக்கு வலிமையும் இனிமையும் சேர்க்கக் கூடியவை.