ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (23:52 IST)

தேனில் நிறைந்துள்ள நன்மைகள்...

சருமத்தின் அழகு மற்றும் மென்மையைத் தக்க வைக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் தேன். தேனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதுடன், சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும்.
 
சில கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்கள் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால், அப்போது தேனைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். அதுவும்  தேனை தனியாகவோ அல்லது முட்டை, எலுமிச்சை போன்ற பொருட்களுடன் சேர்த்தோ சருமத்தில் பயன்படுத்தலாம்.
 
சருமத்தில் படிந்துள்ள கருமை நிறத்தைதோ அல்லது பழுப்பு நிறத்தையோ போக்குவதற்கு, எலுமிச்சை துண்டை, தேனில் தொட்டு, நிறம் மாறி காணப்படும்  இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்யவேண்டும். இந்த முறையை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.
 
சருமத்தின் இளமையைத் தக்க வைக்க 2 டேபிள் ஸ்பூன் தேனில் 1/2 கப் பால் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு, தினமும் இரண்டு முறை கழுவி வாருங்கள். இதனால் நல்ல பலன் கிட்டும்.
 
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்குவதற்கு, தேனை தக்காளியுடன் சேர்த்து மாஸ்க் போடுவது நல்லது. இந்த முறையைக்கு தக்காளியை  அரைத்து பேஸ்ட் செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
 
தேனில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 வாரத்திற்கு பின்பற்றினால், நல்ல மாற்றம் தெரிய வரும்.