விடிய விடிய குதுகலம்... Vi வழங்கும் அதிவேக டேட்டா சலுகை!

Sugapriya Prakash| Last Modified புதன், 17 பிப்ரவரி 2021 (14:57 IST)
வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா வழங்கவுள்ளது. 

 
ஆம், வி நிறுவனம் இரவு நேர அதிவேக டேட்டாவை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இதனை நள்ளிரவு 12 மணி துவங்கி காலை 6 மணி வரை பயன்படுத்தலாம். 
 
இந்த சலுகை ரூ.249 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுக்கு மட்டும் பொருந்தும். மேலும் இரவு நேர அதிவேக டேட்டா சலுகை பிப்ரவரி 16 ஆம் தேதி அல்லது அதன் பின் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே கிடைக்கும். 
 
இணையதளம் மற்றும் ஒடிடி பயன்பாடு இரவு நேரங்களில் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக வி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :