வசந்த் டிவியில் நான்கு குள்ள மனிதர்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் புதிய நகைச்சுவைத் தொடர், நான்கு கில்லாடிகள்.
மூன்று அடி உயரமுள்ள நான்கு குள்ளர்கள் கொள்ளை அடிப்பது, குழந்தைகளை கடத்துவது போன்ற கிரிமினல் வேலைகளை காமெடியாக செய்து ஒரு தாதாவை அமைச்சராக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த காமெடி கதையில் நான்கு குள்ளர்களும் சேர்ந்து சினிமா தயாரிப்பது, அரசியல் கட்சி துவங்கி அலம்பல் பண்ணுவது என காமெடி செய்கிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு இந்த நகைச்சுவை தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் கே.ஜெயமணி.