செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை » செய்திகள் » விஜய் டிவியின் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் தொட‌ர் (Vijay TV | Kallikkattu Pallikkoodam | TV Serial)
Feedback Print Bookmark and Share
 
webdunia photo
WD
பள்ளி பருவத்தின் துள்ளித்திரியும் காலத்தை மிகவும் அழகாகவும் இயல்பாகவும் விஜய் டிவியின் "கனா காணும் காலங்கள்" தொடர் காண்பித்தது. அ‌ந்த‌த் தொடரை‌க் காட்டிலும் பெரிய வெற்றியை தர தயாராக் உள்ளது. இம்முறை "கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்" மூலம்.

அதென்ன, கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்? இதுவும் பள்ளியில் நடக்கும் கதைதான். இம்முறை நகர பள்ளி அல்லாமல் கிராமத்துப் பள்ளியில் நடக்கும் விறுவிறுப்பான தொடர்.

மதுரை அருகே தேனி மாவட்டத்தில் மிகவும் அழகான மலை பரப்பிற்கு நடுவே குமரகுருபரர் என்ற ஒரு உயர்நிலைப்பள்ளி. கல்விச் சேவைக்கு பெயரும் புகழும் பெற்றது. அங்கு படிக்கும் மாணவர்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் பிற கல்வி நிறுவனங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். பெரும் செல்வந்தர்கள் மற்றும் நன்கு படித்த பிள்ளைகளுக்கு மட்டுமே குமரகுருபரர் பள்ளியில் இடம் கிடைக்குமாம்! தேனி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராம சிறுவர்களுக்கு குமரகுருபரர் பள்ளி ஒரு பெரும் கனவு. அதுவும் காரியாபட்டி சிறுவர்களுக்கு அது நிறைவேறாத ஒரு கனவு! அதென்ன நிறைவேறாத கனவு?

pallikudam
webdunia photo
WD
காரியாப்பட்டி மக்களுக்கும் - தேனி குமரகுருபரர் பள்ளிக்கும் இடையே ஒரு சின்ன வழக்கு. இந்த சின்ன வழக்கு வாக்குவாதத்தில் துவங்கி, அடிதடியாகி, பள்ளிக்கூடத்தை எரித்து சாம்பலாக்கி, கோர்ட்டில் காரியாபட்டி ஆட்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததோடு காரியாபட்டி சிறுவர்களுக்கு குமரகுருபரர் பள்ளியில் படிக்க இடம் கிடையாது! இதுதான் இதன் பின்னனி. காரியாப்பட்டி பள்ளியில் வெறும் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே உண்டு! மேற்படிப்பிக்கு இவரக்ள் போக வேண்டியது மதுரைக்கு! இதே நிலைதான் பல ஆண்டு காலமாக உள்ளது.

இந்த தடையை தகர்க்க புதிதாய் பதவி ஏற்கிறார் குமரகுருபரர் பள்ளியின் முதல்வர். இனி காரியாபட்டி சிறுவர்களுக்கும் குமரகுருபரர் பள்ளியில் படிக்க தடையேதும் இல்லை என்ற சட்டத்தைப் கொண்டு வந்தார். காரியாபட்டி மாணவர்களுக்கு குமரகுருபரர் பள்ளியில் இடம் கிடைத்த சந்தோஷம்! ஆனால் குமரகுருபரர் பள்ளி மாணவர்களுக்கோ தீராத பகை தொற்றிக் கொள்ள, பலவித சுவாரஸ்ய நிகழ்வுகள் தொடருகிறது "கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடத்தில்".

நகரத்து மாணவர்கள் மத்தியில் காரியாபட்டி மாணவர்களால் தாக்கு பிடிக்க முடியுமா? எப்போது மோதல் துவங்கும், எப்போது அது முடியும்? இவர்களை ஒன்று சேர்க்க ஆசியர்கள் படும் பாடு; கைகலப்பும், கலகலப்பும் நிறைந்திருக்கும் இத்தொடரை வரும் அக்டோபர் 05, 2009 முதல் திங்கள் - வெள்ளி, இரவு 7:30 மணிக்கு விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள்!

நட்பு, மோதல், சண்டை, விட்டுக்கொடுத்தல், கல்வியின் மகத்துவம், மரியாதை, குறும்பு, மண் மனம் மாறாத மதுரை தமிழ் போன்ற எல்லா உணர்ச்சிகளும் இத்தொடரில் இடம்பெறும். விஜய் டிவியில் காணத்தவறாதீர்கள்!
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்