செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை » செய்திகள் » ம‌க்க‌ள் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் இவ‌ர்க‌ள் (Makkal TV | Ivargal)
Feedback Print Bookmark and Share
 
ந‌ம்மோடு தொட‌ர்பு‌ள்ள ஆனா‌ல் ந‌ம்மா‌ல் புற‌க்க‌ணி‌க்க‌ப்படு‌ம் ‌சிலரை ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் ந‌ம் க‌ண் மு‌ன் கொ‌ண்டு வரு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சிதா‌ன் இவ‌ர்க‌ள். இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரு‌கிறது.

இந்த சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள், சமூகத்தால் உரிய அங்கீகாரம் தரப்படாதவர்கள், சமூகத்துக்கு முக்கியமானவர்கள் இல்லை என்று கருதப்படுபவர்கள் ஆகியோரை இந்த நிகழ்ச்சி இனம் காட்டுகிறது.

அதாவது, சாக்கடை அள்ளுபவர், கடற்கரையில் சுண்டல் விற்பவர்கள், குப்பை பொறுக்கி வாழ்பவர்கள், பிணம் எடுப்பவர்கள், அரவாணிகள் என்று சமூகத்தில் கடைநிலை மக்களாக சித்தரிக்கப்பட்டிருப்பவர்கள் அ‌ந்த இவ‌ர்க‌ள்.

கவனிக்கப்படாத இந்த மக்களை கருத்தில் கொண்டு அவர்களை நேர்காணல் செய்து அவர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது லட்சியத்தையும் பதிவு செய்யும் நிகழ்ச்சியாக இவ‌ர்க‌ள் அமை‌ந்து‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்