சின்னத்திரையில் இருந்து வெகு நாட்களாக தள்ளி இருந்த இயக்குநர் கே. பாக்யராஜ் மீண்டும் ஒரு புதிய தொடரின் மூலம் சின்னத்திரைக்கு மறுப்பிரவேசம் செய்கிறார்.
கலைஞர் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் விளக்கு வெச்ச நேரத்திலே. இந்தத் தொடருக்கு கதை, திரைக்கதையுடன் வசனமும் எழுதுகிறார் டைரக்டர் கே.பாக்யராஜ்.
நீண்ட இடை வெளிக்குப் பிறகு சின்னத்திரையில் அவர் கதை- வசனம் எழுதும் தொடர் இது.
தயாரிப்பு ஒருங்கிணைப்பு ஈ.ராம்தாஸ். இசை: தேவா, பாடல்: வைரமுத்து. கேமராவை பொன்ஸ் சந்திரா கையாள, சி.ரங்கநாதன் இயக்குகிறார்.