சூரியன் எப்.எம். நடத்திய அருவா சிங்கம் நிகழ்ச்சியில் சிறந்த கடி ஜோக் சொன்ன சென்னை நேயர் பிரவீனுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
சூரியன் எப்.எம். தனது நேயர்களுக்காக அருவா சிங்கம் 2009 என்ற சிரிப்பு போட்டியை நடத்தியது.
இந்த போட்டியில் சிறந்த கடி ஜோக் சொல்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த போட்டியின் தகுதிச் சுற்றுகள் கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று ஆழ்வார்பேட்டை எம்சிடிஎம் மெட்ரிகுலேசன் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
இறுதிப் போட்டிக்கு நகைச்சுவை நடிகர்கள் சிட்டிபாபு, பாண்டு, கஞ்சா கறுப்பு மற்றும் பிளேடு சங்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
இதில் சென்னையைச் சேர்ந் பிரவீன் முதலிடம் பெற்று ரூ.1 லட்சம் பரிசைத் தட்டிச் சென்றார். இரண்டாம், மூன்றாம் இடங்களை பெண்களே பிடித்தனர். அவர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.