செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை » செய்திகள் » ‌சி‌ன்ன‌த்‌திரை ‌செ‌ய்‌தி‌த் து‌ளிக‌ள் (TV Channel | News for TV)
 
சி‌ன்ன‌த்‌திரை ப‌ற்‌றிய ‌சில ‌சி‌ன்ன செ‌ய்‌திக‌ளி‌ன் தொகு‌ப்பு‌க‌ள் இ‌ங்கே

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் புதன் கிழமை வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `சரிகமபா' இசை நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமை நடுவராகக் கொண்டு இசை நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. நிகழ்ச்சியில் வெளிநாட்டு இசை மேதைகளுடன் தனக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார், வாணிஜெயராம்.

நடிகை சிம்ரன் சினிமாவில் வாய்ப்பு அரிதானதும் தமிழில் சின்னத்திரை பக்கமாக நகர்ந்தார். பிரமிட் சாய்மீரா தயாரித்த `சிம்ரன் திரை' தொடரில் நடித்தார். தொடர்ந்து சீரியல் வாய்ப்புக்களும் இல்லாத நிலையில் இப்போது தெலுங்கில் கிடைத்த சீரியல் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தெலுங்கு சீரியலில் நடித்தபடியே தெலுங்குப் படங்களில் நடிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.


கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி உச்சக்கட்டம். சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராஜி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்களின் உச்சக்கட்ட காட்சிகள் மட்டும் காண்பிக்கப்படுகின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்