செய்திகள்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சின்னத்திரை » செய்திகள் » சென்னையில் இன்று பாலிமர் டி.வி. துவ‌க்க‌ம் (New TV channel for Chennai | Cable TV Operators | Polimer TV)
 
ஏ‌ற்கனவே இரு‌க்கு‌ம் ப‌ல்வேறு தொலை‌க்கா‌ட்‌சி அலைவ‌ரிசைக‌ளி‌ன் வ‌ரிசை‌யி‌ல், தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் சார்பில் இ‌ன்று துவ‌‌க்க‌ப்படு‌ம் பாலிமர் சாட்டிலைட் என்ற புதிய டி.வி.யு‌ம் சேர உ‌ள்ளது.

இது கு‌றி‌த்து தமிழக கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் பொது நல சங்க தலைவர் பி.சகிலன் பேசுகை‌யி‌ல்,

polimer
webdunia photo
WD
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை இணைத்து ஒரு இயக்கமாக கடந்த 12 ஆண்டுகளாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

கேபிள் டி.வி. தொழிலை பாதுகாத்து மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறோம். பல்வேறு தமிழ் சேனல்களை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தி பிரதான சேனலாக மாற்றியது எங்கள் சங்கம் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கேபிள் டி.வி. தொழிலை நடத்தி வந்த `பாலிமர்' நிறுவனம் தற்பொழுது பாலிமர் சாட்டிலைட் டி.வி.யை தொடங்க உள்ளது.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களோடு இணைந்து தொடங்கும் முதல் தமிழ் சேனல் இது ஆகும். இந்த டி.வி.யில் காலை, மாலை, இரவு ஆகிய நேரங்களில் 1/2 மணி நேரம் செய்திகளும், மக்களை சென்றடையும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக உள்ளது எ‌ன்று அவர் கூறினார்.

இந்த டி.வியின் தொடக்க விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்