சின்னத்திரை பற்றிய சின்ன சின்ன விஷயங்களை இங்கு தொகுத்து அளித்துள்ளோம். இமயம் தொலைக்காட்சியில் காமத்துப்பால் பாலுறவு தொடர்பான வாசகர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், மருத்துவர்கள் பதில் அளிக்கும் நிகழ்ச்சி காமத்துப் பால். இந்நிகழ்ச்சி இமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. காமத்துப்பால் நிகழ்ச்சியில் பாலுறவு தொடர்பான பல கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதில் அளிக்கின்றனர். மேலும், நேயர்களின் கடிதத்திற்கும் இந்நிகழ்ச்சியிலேயே அவர்களுக்கு பதில் தெரிவிக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஜீ டிவியில் சரிகமப சேலஞ்ச் 2009 சரிகமப சங்கீத மகா யுத்தம் நிகழ்ச்சியின் மூலம், 14 குழந்தை பாடகர்களை அறிமுகம் செய்த ஜீ டிவி, இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, தற்போது சரிகமப சேலஞ்ச் 2009 என்ற பெயரில், இளம் பாடகர்களை உருவாக்க உள்ளது. நிகழ்ச்சியில், மாதங்கி, ஸ்ரீலேகா, விஜய் ஏசுதாஸ், பிரசாந்தினி, உள்ளிட்ட 15 இளம் பின்னணி பாடகி மற்றும் பாடகர்கள் தங்களுடன் சேர்ந்து பாடுவதற்கு 15 புதிய பாடகர்களை, இந்த நிகழ்ச்சி மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். இவர்களில் சிறந்த ஜோடிகளை எம்.எஸ்.விஸ்வநாதன், நித்யஸ்ரீ உள்ளிட்ட இசைத்துறை நடுவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வேலைவாய்ப்புத் தகவல்கள் எந்த வேலைக்கு நாட்டிலும், உலக அளவிலும் தேவை அதிகமாக இருக்கிறது... முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களும் கூடுதலாக எதைப் படித்தால் வேலை கிடைப்பது சுலபமாகும் என்று கல்வியாளர்கள் பங்கேற்று நேரலையில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வேலைவாய்ப்புத் தகவல்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராம்குமார் சிங்காரம். வியாழன் தோறும் காலை 11 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம். குறும்புச் சித்திரம் நிகழ்ச்சி சித்திரப் படங்கள் என்றால் குழந்தைகளுக்கு அலாதி பிரியம். அவர்களை குதூகலப்படுத்தும் விதமாக மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சித்திர நிகழ்ச்சி அவர்களை மகிழ்ச்சியடைய மட்டும் செய்யக் கூடிய விதத்தில் உள்ளன. வாரத்தில் திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த குறும்புச் சித்திரம். |