 | | webdunia photo | K. AYYANATHAN | |
|
தென்னிந்திய திரைப்படங்களில் வரக்கூடிய அழகிய இயற்கைச் சூழலின் பின்னணியுடன் எடுக்கப்படும் ஆற்றங்கரைக் காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்படும் கேரளத்தின் அதிரம்பள்ளியில் இருந்து தமிழ்நாட்டின் வால்பாறைக்கு செல்லக் கூடிய 38 கி.மீ. நீள காட்டுப்பாதை ஒர் அரிய, சற்றே அபாயம் நிறைந்த சுற்றுலாப் பாதையாகும்.
சாலக்குடியில் இருந்து புறப்பட்டு, சாலக்குடி ஆற்றங்கரையோரமாகவேச் செல்லும் சாலையில் ஒரு 10 கி.மீ. தூரம் பயணம் செய்தால் அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சியைக் காணலாம்.
அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நயாகரா நீர் வீழ்ச்சியின் சிறு வடிவம் போல இருப்பது அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியாகும்.
சாலக்குடி ஆற்றில் திடீரென்று செங்குத்தாய் உள்ள நீண்ட பாறைச்சரிவில் அழகாய் விழும் அற்புத நீர்வீழ்ச்சி அதிரம்பள்ளி.
இந்த நீர்வீழ்ச்சியின் மேல்பகுதிக்குச் சென்று ஓரளவிற்கு ஆற்றில் நடந்து நீர் விழும் காட்சியை பார்ப்பதற்கும் வாய்ப்புள்ளது.
 | | webdunia photo | K. AYYANATHAN | |
|
நெடுந்துயர்ந்த மூங்கில் காடுகளுக்கிடையே நடந்து சென்று சாலக்குடி ஆற்றுக்குச் செல்வது ஓர் அருமையான அனுபவம். அதையும் மீறியது அதிரம்பள்ளியில் தண்ணீர் விழும் நெஞ்சை மிரளச் செய்யும் காட்சியைக் காண்பது.
|