 | | webdunia photo | K. AYYANATHAN | |
|
சற்று உள்ளே செல்லுங்கள். மலை முகட்டில் இருந்து கீழே பார்த்தால் பார்சன் வேலி மின் நிலையம் தெரியும். செக்கோஸ்லாவாகிய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட சத்தம் போடாத டர்பைன் மூலம் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையம் இது.
பார்சன் வேலியில் இருந்து வரக்கூடிய தண்ணீரைக் கொண்டு இயங்கும் இந்த மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், அங்கிருந்து எமரால்ட் எனும் மற்றொரு அணைக்குச் செல்கிறது.
எமரால்ட் அணைப் பகுதியும், கொஞ்ச தூரம் சென்றால் அவலாஞ்சி அணைப் பகுதியும் நெஞ்சில் நீங்காத இயற்கை காட்சிகளுடன் அமைந்துள்ளதைக் காணலாம்.
 | | webdunia photo | K. AYYANATHAN | |
|
இப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் மிக அதிகம். தப்பித்துச் செல்வதற்கெல்லாம் இடமில்லை. அதனால் உங்களது விதியையும், அதிர்ஷ்டத்தையும் நம்பித்தான் செல்ல வேண்டும். சிறுத்தைகள், புலிகள், நாயைப் போலவேக் குரைத்து நாயை அடித்து சாப்பிடும் ஒரு வகை சிறுத்தையும் இங்கு உண்டு. பயங்கர செந்நாய் கூட்டத்தையும் காணலாம். காட்டுக் கோழியைக் கண்டால் அசந்து விடுவீர்கள். அதன் மீது அத்தனை வண்ணங்கள். அதனையும் மிஞ்சம் அழகுடன் சேவல்.
காலையில் புறப்பட்டுச் சென்று மாலை முடிவதற்குள் வந்து விடுங்கள். பாதுகாப்பானது.
வாழ்க்கையில் கண்ணாறக் காண வேண்டிய இடங்களில் வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் 1ம் முக்கியமானது.
|