நம்மில் பலருடைய கனவு துபாயில் சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதே. இன்றைய உலகமெங்கும் உள்ள பொருளாதார சரிவில் அதற்கு ஏற்ற சமயம் இது அல்ல. பொருள் ஈட்ட மட்டுமல்ல நல்ல சுற்றுலா தலமாகவும் துபாய் விளங்குகிறது. அங்கு சுற்றுலா செல்ல தடை ஏதும் இல்லையே.. அது அந்த நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் என்பதால்....
தனித்தனியாக சிறு சிறு நாடுகளாக இருந்தால் தங்களுக்கு என்று ஒரு அந்தஸ்து உலக வரைபடத்தில் கிடைக்காது என்று 7 சிறு நாடுகளான அபுதாபி( Abu Dhabi), துபாய் (Dubai), ஷார்ஜா (Sharjah) , அஜம்ன் (Ajman), ரசில்கைமா (Ras al-Khaimah), உம்ஆல் க்விந் (Umm al-Qaiwain), ஃபுஜைர்ஹ் (Fujairah) இவைகள் ஒன்றாக இணைந்து யுனைடெட் அரப் எமிரேட்ஸ் (United Arab Emirates) என்ற நாடாக உருவாகியது. ஐக்கிய அரபு நாடுகள் என்ற அந்தஸ்தை உருவாக்கி இன்று உலகிலேயே சௌதிக்கு அடுத்தபடியாக எண்ணெய் வளத்தில் சிறந்து விளங்குகிறது..
இதில் அபுதாபி தான் இவைகளுக்கு தலைமை இடம். ஆனால் எல்லோராலும் அதிகம் அறியப்படுவது துபாய் என்ற 3 மந்திர எழுத்து தான். தூபாயில் கூலி வேலை செய்தாலும் பரவாயில்லை, ஆனால் துபாய் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று நினைத்த மக்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு மாயையை உருவாக்கியுள்ளது துபாய்.ஐக்கிய அரபு நாடுகளில் ஒரு முழுமையான சுற்றுலாவை 5 நாட்களில் முடித்து விடலாம்.
webdunia photo
WD
2011ஆம் ஆண்டில் உலகின் 3 வது பெரிய சர்வதேச விமான நிலையமாக தரம் உயரப் போகிறது துபாய் சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தின் 80% பணிகள் முடிவடைந்து ஒரு பக்கம் போக்குவரத்து துவங்கியுள்ளது. இந்த விமான நிலையத்தை காணவே ஒரு முறை துபாய்க்கு பயணப்பட வேண்டும். பாம் ஜும்மைரா (Palm Jumeirah) எனும் இடம் விமானத்தில் இருந்தே மிக அழகாகத் தெரியும். சுற்றுலாப் பயணம் விமானத்திலேயே தொடங்கிவிடுகிறது.
தூபாயில் நிறைய பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் இருக்கிறது.... பல மால்கள், அருங்காட்சியகம், பூங்காக்கள், பொழுபோக்கு அரங்கம் என பல இடங்கள் உள்ளது.
ஐக்கிய அரபு நாடுகள் முழுவதும் பாலைவனம் தான். ஆனால் இந்தப் பாலைவனத்தில் கட்டிடக் கலையால் ஒரு மாயாபுரியை உருவாக்கி உள்ளார்கள்.
எங்கு பார்த்தாலும் விண்ணை முட்டும் கட்டிடங்கள், ஏன் விண்ணைத் தாண்டும் மிகப் பெரிய கட்டிடமும் துபாயில் தான் இருக்கிறது. பூர்ஜ் அல் ராப் (Burj al arab) என்பது அந்த கட்டடத்தின் பெயர். இந்த கட்டிடம் முடிக்கும் தருவாயில் உள்ளது, இதுவே உலகின் கட்டி முடிக்கப்பட்ட மிகப் பெரிய கட்டிடம் ஆகும்.
எண்ணெய் வளம் அதிகம் இருக்கும் இடம் ஷார்ஜாதான். ஆனால் மிகப் பெரிய துறைமுகம் இருக்கும் இடம் துபாய் ஜெபெல் அலி போர்ட் (Jebel Ali port). தினமும் பல கப்பல்கள் இங்கு வந்துப் போகிறது.
webdunia photo
WD
துபாய் ஒரு நவ நாகரீக நகரம். அரபு நாடுகளில் இருப்பதைப் போல் ஒரு உணர்வு இருக்காது. புதிய வரவாக... டால்ஃபிநேரியம் (Dolphinerium), துபாய் மால் (Dubai Mall), அட்லாண்டிஸ் (Atlantis) இவை மூன்றும் டால்ஃபிநேரியம். இதில் 4 டால்ஃபின்பகள் (Dolphins), சீல்(Seals)களின் அழகிய நடன நிகழ்ச்சி காண வேண்டிய ஒன்று...
துபாய் மாலில் மிகப் பெரிய ஒரு கண்ணாடித் தொட்டியில் கடல் வாழ் உயிர் இனங்கள், அரிய வகைகள் பல உள்ளன. அதில் உள்ள சுறா மீன் எல்லோரையும் கவர்கிறது. குழந்தைகளுக்கு மிகப் பெரிய சுறா மீன்களை அருகே பார்க்கும் போது பயம் கலந்த மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கைதானே..
இதேபோல், ஷார்ஜாவில் ஒரு சிறிய மீன்கள் அருங்காசியகம் இருக்கிறது. இதுவும் காண வேண்டிய ஒரு சுற்றுலாத் தலமாகும்.
அட்லண்டிஸ் ஹோட்டல் (Atlantis Hotel) எனும் இடம் கட்டிடக் கலையில் ஒரு மைல் கல் எனலாம். கடலின் நடுவே ஒரு தீவு போல் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. வண்டிகள் பயணிக்கும் மிக அழகிய சுரங்கப் பாதை 2 கீ.மீ. தூரம் கடலுக்கு உள்ளே கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டிடக் கலையின் சிறப்பு என்றே கூறவேண்டும்.