தமிழ் நாடு | சுற்றுலாத் தலங்கள் | திருத் தலங்கள் | கடலோரம் | மலை அரசி | வன உலா | சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சுற்றுலா » சுற்றுலாத் தலங்கள் » வளைகுடாவில் ஒரு பாலைவனசோலை
 
பொதுவாக பருவ காலங்கள் நான்கு வகையாக பிரிக்கபட்டு உள்ளது. ஆனால் வாளைகுடாவில் இரண்டு காலங்கள் மட்டுமே. கோடை காலம் என்பது 10 மாதங்கள்.. மற்ற 2 மாதங்கள் மிதமான குளிரகால‌ம்.

வறுத்து எடுக்கும் கோடை நாட்கள் பற்றி எழுதவே வேண்டாம்... வளைகுடா மக்கள் குளிர்சாதன பெட்டி இன்றி ஒரு நொடி கூட இருக்க மாட்டார்கள்.

webdunia photo
WD
கண்களை மூடிக்கொளுங்கள்....இப்போது தகிக்கும் வெயிலின் பாலைவனதின் நடுவே அழகான பசுமையான மலை தொடர்கள், இதமான குளிர் காற்று, இயற்கையின் எல்லா அழகுகளும் இருக்கும் ஒரு சோலையில் இருப்பதை போல் கற்பனை செய்து கொள்ளுங்கள்….

ஆம் , நீங்கள் இப்போது கற்பனை செய்த இடம் போல்... வளைகுடாவில் ஒரு இடம் இருக்கிறது ...பூலோக சொர்க்கபூமி....... ஒரு சிறிய ஸ்விட்ஸர்லா‌ந்து (Switzerland)...... சுல் தான் ஆஃப் ஓமனின் (Sultanate of Oman) ஒரு பகுதியான தோஃபார் (Dhofar) எனப்படும் பகுதியின் தலைமை இடம் சலாலா (Salalah) என்னும் இடம் தான் அது.

வளைகுடாவில் ஒரு பாலைவனசோலை

இந்த தலைப்பு ஒரு திரைபடத்தின் தலைப்பு போல் தெரிந்தாலும் இந்த நாட்டை பொருத்தவரை நூறு ‌விழு‌க்காடு உண்மை.

webdunia photo
WD
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் போது அதன் தாக்கம் இங்கு தெரிகிறது . ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை அருமையான தென்றல் காற்று, பனி பொழியும் மலை மேல் தவ‌ழ்ந்து வரும் மேகங்கள், சாரல் மழை , எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தது போல் பசுமை, புல் வெளிகள், சலசலக்கும் நீரோடை, ஆர்ப்பறித்து கொட்டும் நீர் அருவி, கூட்டமாக பறந்து வரும் பறவை கூட்டங்கள் என்று இந்த அழகை காண்பதற்க்கு இரண்டு கண்கள் போதாது. இதை தவிர இந்த மாதங்களில் இங்கு நடக்கும் கண்காட்சிகள் ஒரு திருவிழா போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இது மட்டும் அல்லது மாநகராட்சி ஏற்பாடு செய்யும் பல கலை நிகழ்சிகள் கண்களுக்கு விருந்தாகும்.

1080 ‌கி.‌மீ. தொலைவில் உள்ள மஸ்கட்டில் (Muscat) 50 டி‌கி‌ரி வெயில்.. ஓமான் அருகே இருக்கும் எல்லா வளைகுடா நாடுகளும் வெயிலின் தாக்கதில் இருக்கும் போது இங்கு மட்டும் கடவுளின் கருணை என்ன வென்று சொல்வது...

பலைவனநாடுகளில் மழை என்பது ஒரு அரிதான நிகழ்வு. வருடத்தில் 2 நாட்கள் மழை பெய்தால் அதிகம். ஆனால் சாரல் மழை மிதமாக ,சுகமாக தினமும் இந்த காலங்களில் இங்கு பெய்யும். இதுவே மற்ற வளைகுடா பகு‌திகளுக்கும் இந்த பகுதிக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம். மழை இருந்தால் மற்ற வளங்களுக்கு குறை ஏது?

தற்போது இங்கு ஆட்சி செய்யும் சுல்தான் க்யாபூவூஸ் ஆஃப் ஓமன் (Sultan Qaboos of Oman) பிறந்த இடம் சலாலா. ஒரு சிறிய நாக‌ரீக‌ம் வள‌ர்‌ந்த கிராமம் சலாலா அவ்வளவுதான். ஜூன் முதல் வாரம் முதல் செப் டம்பர் வரை உள்ள பருவ நிலை காலத்தை “கரீப்”’ ( khareef) என்று கூறுகிறார்கள்.

அண்டை நாடுகளான குவைத், ப‌‌ஹ‌‌்ரைன், சௌதி, துபாய், அபுதாபி, இந்தியா மற்றும் அமெரிக்கா, யுரோப் போன்ற மற்ற நாடுகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாக இங்கு வந்து இந்த வஸந்த காலத்தை அனுபவிக்கிறார்கள். வெட்ட வெளியில் குடில் அமைத்து அமைதியா ரசித்து விட்டு நிறைவான மனத்தோடு திரும்பி செல்கிறார்கள். ஒவ்வொரு ஆ‌ண்டும் இங்கு வந்து குவியும் சுற்றுலாப‌் பய‌ணிக‌ளி‌ன் கூட்டங்கள் அதிகரிக்கவே செய்கிறது.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்