(அங்கு ஏராளமானவர்கள் இருப்பார்கள்) சிறந்தது. ஏனெனில் அவ்வளவு தூரம் சென்றுவிட்டு ஏதாவது ஒன்றை பார்க்காமல் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.
ஒவ்வொரு ஓவியத்தின் அழகையும், அதற்குள் ஒளிந்திருக்கும் கலை வேலைபாடுகளையும் ரசிக்க பல மணி நேரங்கள் ஆகும். குகை ஓவியங்களில் உள்ள பல்வேறு நுணுக்களை நாம் தெரிந்து கொள்ள சுற்றுலா வழிகாட்டி நமக்கு மிகுந்த உறுதுணையாக இருப்பார்.
முதல் குகையில் இருந்து உங்களது பயணத்தைத் துவக்குங்கள். அதில் மிக அருமையான ஓவியங்களும், பத்மபானி, வஜ்ரபானி ஆகிய புத்த துறவிகளின் அழகிய சிலைகள் இடம்பெற்றிருக்கும்.
2வது குகையின் மேற்கூரையில் வரையப்பட்டிருக்கும் நுண்ணிய ஓவியங்களைக் கண்டால் நீங்கள் அசந்தே விடுவீர்கள். அடுத்த குகையில் அதிகமான சுவர் ஓவியங்களைக் காணலாம். அவை யாவும் புத்த துறவிகளின் கதைகளை பறைசாற்றுபவை.
ஒவ்வொரு ஓவியமும் உங்களது கண்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடும். இதேப்போன்று 17 குகைகளை நீங்கள் கண்டு ரசித்துக் கொண்டே வரலாம்.
ஆனால் 19வது குகையில் சில பயங்கர, அதிர்ச்சியளிக்கக் கூடிய ஓவியங்கள் உள்ளன. அதில் உள்ள கை வண்ணத்தையும் கலையையும் ரசித்துவிட்டு அப்படியே வந்து கொண்டிருந்தால் 26வது குகையில் மரம் மற்றும் சிறிய கற்களில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைபாடுகளைக் காணலாம்.
அஜந்தாவில் மட்டும் ஒரு நாள் முழுவதையும் கழிக்கலாம். உங்கள் கண்கள் பல்லாயிரக்கணக்கான காட்சிகளை நிழல் படங்களாக இதயத்தில் சேமித்துக் கொள்ளும்.
எது எப்படி இருந்தாலும் வாழ்நாளில் ஒரே ஒரு முறையேனும் வாய்ப்பு கிடைத்தால் அஜந்தா ஓவியங்களை காண தவறிவிடாதீர்கள்.
எங்கு தங்குவது?
அஜந்தா ஓவியங்களைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஹெளரங்காபாத் அல்லது ஜல்கோன் பகுதிகளில் தங்கியிருந்து அஜந்தாவைச் சென்று கண்டுவிட்டு வருகின்றனர்.
ஏனெனில் அங்குதான் நிறைய விடுதிகளும், ஹோட்டல்களும் உள்ளன.
அஜந்தா செல்ல வாடகை அல்லது சொந்த வாகனம் மட்டுமே சிறந்தது.
கரடு முரடுகளில் நடக்க உதவும் காலணி, டார்ச் லைட், குடிநீர் நிச்சயம் உங்கள் பைகளில் இருக்க வேண்டும்.
|