நவம்பர் 1ஆம் தேதியான நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு ஊர்களுக்குச் சென்று வரும் 28 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதனால், வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட புதிய ரயில்வே கால அட்டவணையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தெற்கு ரயில்வேயில் 28 விரைவு ரயில்களின் வேகம் 10 நிமிடம் முதல் 11/2 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த வேக அதிகரிப்பு அமலுக்கு வருகிறது.
வேகம் அதிகரிக்கப்படும் ரயில்கள் :
விழுப்புரம் - மதுரை பயணிகள் ரயில் (90 நிமிடம்)
ராமேசுவரம் - ஓக்கா விரைவு ரயில் (80 நிமிடம்)
ஜெய்ப்பூர் - கோவை விரைவு ரயில் (75 நிமிடம்)
ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (75 நிமிடம்)
டேராடூன்-சண்டிகார் - சென்னை சென்டிரல் விரைவு ரயில் (60 நிமிடம்)
ராஜ்கோட் - கோவை விரைவு ரயில் (60 நிமிடம்)
திருவனந்தபுரம் - கோர்பா விரைவு ரயில் (60 நிமிடம்)
எர்ணாகுளம் - பராணி விரைவு ரயில் (35 நிமிடம்)
எர்ணாகுளம் - புனே விரைவு ரயில் (35 நிமிடம்)
சென்னை சென்டிரல் - மங்களூர் விரைவு ரயில் (35 நிமிடம்)
ஜம்முதாவி - கன்னியாகுமரி இம்சாகர் விரைவு ரயில் (30 நிமிடம்)
கோவை - சென்னை சென்டிரல் விரைவு ரயில் (30 நிமிடம்)
சாப்ரா - சென்னை சென்டிரல் கங்கா காவேரி விரைவு ரயில் (20 நிமிடம்)
திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (25 நிமிடம்)
மயிலாடுதுறை - மைசூர் விரைவு ரயில் (25 நிமிடம்)
கொச்சுவேலி - சண்டிகார், கேரளா சம்பக்கிராந்தி விரைவு ரயில் (20 நிமிடம்)
கவுகாத்தி - எர்ணாகுளம் விரைவு ரயில் (20 நிமிடம்)
திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர் விரைவு ரயில் (20 நிமிடம்)
சென்னை சென்டிரல் - கோவை விரைவு ரயில் (20 நிமிடம்)
திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் (20 நிமிடம்)
ஓக்கா - ராமேஸ்வரம் விரைவு ரயில் (15 நிமிடம்)
மைசூர் - மயிலாடுதுறை விரைவு ரயில் (15 நிமிடம்)
கொச்சுவேலி - அமிர்தசரஸ் விரைவு ரயில் (15 நிமிடம்)
சென்னை சென்டிரல் - வாஸ்கோடகாமா விரைவு ரயில் (15 நிமிடம்)
எர்ணாகுளம் - கண்ணூர் இன்டர்சிட்டி விரைவு ரயில் (10 நிமிடம்)
திருவனந்தபுரம் - சோரனூர் விரைவு ரயில் (10 நிமிடம்)
சென்னை சென்டிரல் - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில் (10 நிமிடம்)
சென்னை சென்டிரல் - மங்களூர் வெஸ்ட்கோஸ்டு விரைவு ரயில் (10 நிமிடம்)