தமிழ் நாடு | சுற்றுலாத் தலங்கள் | திருத் தலங்கள் | கடலோரம் | மலை அரசி | வன உலா | சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சுற்றுலா » சு‌ற்றுலா செ‌‌ய்‌தி » தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் (Special Trains From Central)
Feedback Print Bookmark and Share
 
பய‌ணிக‌ளி‌ன் வச‌தி‌க்காக சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது கு‌றி‌த்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், த‌ற்போது தூ‌த்து‌க்குடி‌க்கு‌ம், ‌திரு‌ச்செ‌ந்தூரு‌க்கு‌ம் அ‌திகமான பய‌ணிக‌ள் பய‌ணி‌ப்பதா‌ல், அ‌வ்வூ‌ர்களு‌க்கு செ‌ல்லு‌‌ம் ர‌யி‌ல்க‌‌ளி‌ல் அ‌திக கூ‌ட்ட‌ம் காண‌ப்படு‌கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்டிரல்- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலும், சென்டிரல்- திருச்செந்தூர் இடையே வாரத்திற்கு 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.

சென்னை சென்டிரலில் இருந்து புதன்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0611) மறுநாள் காலை 9.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் நவம்பர் 4-ந் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை இயக்கப்படும்.

தூத்துக்குடியில் இருந்து வியாழக்கிழமைகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (0612) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் மாதம் 5-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 3-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்டிரல்-திருச்செந்தூர் இடையே வாரம் தோறும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 0659) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். அக்டோபர் 31-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இதே போல் மறுமார்க்கத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அடுத்த நாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும். நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, நெல்லை, செய்துங்கநல்லூர், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை தொடங்குகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்