திருமலையில் உள்ள அன்னமய பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் அதன் தலைவர் ஆதிகேசவலு நாயுடு பேசுகையில், அக்டோபர் 21ம் தேதி காலை 6 மணிக்கு சீக்கிர தரிசனம் (விரைவு தரிசனம்) தொடங்கப்படுகிறது. அன்று முதல் 100 ரூபாய் செல்லார் தரிசனம், 200 ரூபாய் அனந்த அர்ச்சனை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
சீக்கிர தரிசன டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300. இந்த டிக்கெட் திருமலை வைகுண்டம் காம்ப்ளக்ஸ் எண்-1 ல் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் முன்பதிவு கிடையாது.
இந்த சீக்கிர தரிசனம் தொடங்குவதன் நோக்கம் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு இடைத்தரகர்கள் டிக்கெட் விலையை விட கூடுதலாக விற்பனை செய்கிறார்கள். இதற்குக் காரணம், ஏழுமலையானை தரிசிக்க குறிப்பிட்ட அளவே சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
எனவே, வரும் 21ம் தேதி முதல் 100 ரூபாய் செல்லார் டிக்கெட், 200 ரூபாய் அனந்த அர்ச்சனை டிக்கெட் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
வரும் 21ம் தேதி தொடங்க இருக்கும் ரூ.300 சீக்கிர தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு தேவையான அளவு கொடுக்கப்படும் என்றார்.