கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாகர்கோவில், செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு வாரந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூட்டநெரிசலை குறைக்கும் பொருட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்(0637) சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜுலை 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் (0638) இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில்(0639) ஜுன் 29, ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 6.40 மணிக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு ஜுன் 30, ஜுலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வாரந்திர சிறப்பு ரயில் (0609) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு ஜுலை 4, 11, 18, 25, ஆகஸ்டு 1 ஆகிய நாட்களில் இரவு 8.25 மணிக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜுலை 5, 12, 19, 26, ஆகஸ்டு 2 ஆகிய நாட்களில் மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்திர சிறப்பு ரயில் (0651) ஜுன் 30, ஜுலை 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மதியம் 3.40 மணிக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜுன் 29, ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் இரவு 7.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு ஜுலை 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜுலை 6, 13, 20, 27 ஆகிய நாட்களில் மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி 22-7-2009 முதல் 27-07-2009 வரை 5 நாட்கள் மேல்மருவத்தூரில் சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் ராக்போட் விரைவு ரயில், வைகை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், பாண்டியன் விரைவு ரயில் உள்பட குறிப்பிட்ட சில ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. |