முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > சு‌ற்றுலா செ‌‌ய்‌தி > வண்டலூர் பூங்காவில் கங்கை நீர் முதலை‌க்குஞ்சு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வண்டலூர் பூங்காவில் கங்கை நீர் முதலை‌க்குஞ்சு
வண்டலூர் பூங்காவில் பராம‌ரி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ரு‌ம் இர‌‌ண்டு கங்கை நீர் பெ‌ண் முதலைகள், 26 குஞ்சுகளை பொரித்துள்ளன. த‌ற்போது இவை பாதுகா‌ப்பான இட‌த்‌தி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 160க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. இங்கு, மொத்தம் 7 வகை முதலைகள் உள்ளன. தவிர, சதுப்புநீர் வகை முதலைகளும் உள்ளன.

பொதுவாக அதிகளவில் குஞ்சு பொரிப்பது சதுப்புநீர் முதலைகள்தான். இதனால், முதலை குட்டிகளை காக்கைகள் தூக்கிச் சென்று விடாமல் இருக்க, சதுப்பு நீர் முதலைகள் உலவும் பகுதிக்கு மேலே வலை போட்டு மூடியிருக்கின்றனர். இந்நிலையில், கங்கைநீர் வகையைச் சேர்ந்த 2 பெண் முதலைகள், தலா 35 முட்டைகளை போட்டன.

பெண் முதலைகள் 2 மாதங்களாக முட்டைகளை அடை காத்து வந்தன. 70வது நாளில் 26 முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன. இன்னும் 44 முட்டைகளை தொடர்ந்து முதலைகள் அடை காத்து வருகின்றன. குஞ்சுகள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான், ஆண் குட்டிகள் எத்தனை, பெண் குட்டிகள் எத்தனை என்பது தெரிய வரும் என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலை குஞ்சுகளை காக்கைகள் தூக்கிச் செல்லாமல் இருக்க வலை அமைக்கும் பணி நடக் கிறது. அதுவரை பாதுகாப்பான இடத்தில் 2 பெண் முதலைகளும், குஞ்சுகளும் வைக்கப்பட்டுள்ளன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
செந்தூர் ‌விரை‌வு ர‌யி‌ல் தினசரி ரெயிலாகுமா?
வார விடுமுறையில் வாருங்கள் பேய் விடுதிக்கு
ர‌யி‌லி‌ல் ‌விரு‌ம்‌பு‌ம் உணவு‌க்கு 139-க்கு அழையு‌‌ங்க‌ள்
குற்றாலத்தில் மீண்டும் ‌‌சீச‌ன் : அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது
மதுரையில் இருந்து டெல்லிக்கு 'பாரத் தர்ஷன்’ சுற்றுலா இரயில்
ஏற்காட்டில் கோடை விழா இன்று துவக்கம்